குடிமக்கள் சாசனம் - ஆர்பிஐ - Reserve Bank of India
rbi.page.title.1
rbi.page.title.2
குடிமக்கள் சாசனம்
| வ.எண் | பணியின் வகை | தேவைப்படும் காலம் |
|---|---|---|
| 1 | வங்கித் துறையில் கொடுக்கப்பட்ட ஆர்.பி.ஐ-யின் மீது வரையப்பட்ட காசோலையின் அடிப்படையில் ஒரு வங்கியின் நடப்புக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கியின் நடப்புக் கணக்கிற்கு நிதியை மாற்றுதல் | காசோலையைப் பெற்றவுடன் உடனடியாக |
| 2 | ரிசர்வ் வங்கியில் நடப்புக் கணக்கை பராமரிக்கும் வங்கி, கணக்கில் பணம் போடுதல் | 15 நிமிடங்கள் (ரொக்கப் பணத்தின் எண்ணிக்கை அளவை பொறுத்தது) |
| 3 | ரிசர்வ் வங்கியில் நடப்புக் கணக்கை பராமரிக்கும் வங்கி, கணக்கிலிருந்து பணம் எடுத்தல் | 20 நிமிடங்கள் (ரொக்கப் பணத்தின் எண்ணிக்கை அளவை பொறுத்தது) |
| 4 | கேட்பு வரைவோலை வெளியிடுதல் | ஒரு மணி நேரம் |
| 5 | காசோலை புத்தகங்கள் வெளியிடுதல் | 20 நிமிடங்கள் |
| 6 | வங்கிகள் வைத்திருக்கும் நடப்புக் கணக்குகளின் தினசரி அறிக்கையை வழங்குதல் | CBS-E-Kuber வலைத்தளத்தில் ஆன்லைன் மூலம் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அறிக்கைகள் உடனடியாகக் கிடைக்கும் |
| 7 | மறுநிதியளிப்பு வசதி மற்றும் கடன்களை வழங்குதல் | அதே நாள் அல்லது கோரப்படும்போது |
| குறிப்பு: கால அளவு முழுமையான வேலை நாட்களைக் குறிக்கிறது | ||
| வ.எண் | பணியின் வகை | தேவைப்படும் காலம் |
|---|---|---|
| 1 | வெளிநாட்டிலிருந்து வணிகக் கடன் (ECB) / அந்நியப் பணபரிமாற்றப் பத்திரங்கள் (FCCB) | |
| ஒப்புதலின் படியான வர்த்தகக் கடன் | 7 வேலை நாட்கள் | |
| தானியங்கி வழிமுறைப்படி ஏற்கனவே பெறப்பட்ட ECBகள் தற்போதுள்ள கட்டமைப்பிலிருந்து விலகுவதற்கான ஒப்புதல் கட்டமைப்பிலிருந்து விலகுவதற்கான ஒப்புதல் | 15 வேலை நாட்கள் | |
| ஒப்புதல் வழிமுறையின்படி ECB (அதிகாரமளிக்கப்பட்ட குழு அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பவை தவிர) | 30 வேலை நாட்கள் | |
| 2 | அந்நிய முதலீடு | |
| Foreign Direct Investment: References/clarifications/approvals sought under extant FDI Rules/ regulations (should be invariably routed through AD banks) | 30 working days | |
| References relating to reporting received from AD branches / individuals/ companies - | 15 working days | |
| 3 | வெளிநாடுகளில் இந்திய முதலீடு | |
| கூட்டு முயற்சிகளில் வெளிநாடுகளில் முதலீடு மற்றும் முற்றிலும் சொந்தமான துணை நிறுவனங்கள் (தானியங்கி வழிமுறையில் வராதவை) | 40 வேலை நாட்கள் | |
| வெளிநாடுகளில் கூட்டு முயற்சிகளில் உள்ள பங்குகளின் மறுமுதலீடு/ துணை நிறுவனங்கள் – அனுமதி வழிமுறையின் கீழ் | 40 வேலை நாட்கள் | |
| அனுமதி வழிமுறையின் கீழான பிற வகைப்பட்ட அந்நிய முதலீடுகள் | 40 வேலை நாட்கள் | |
| தனித்த அடையாள எண் வழங்குதல் (UIN) | ஆன்லைன் அறிக்கையிடல் அமைப்பால் தானாக உடனடியாக உருவாக்கப்பட்டது | |
| 4 | ஏற்றுமதிகள் | |
| ஏற்றுமதிக்கான GR படிவ நடைமுறைகளைத் தள்ளுபடி செய்வதற்கான அனுமதி @ | 7 வேலை நாட்கள் | |
| எதிரீடு/ தள்ளுபடி @ | 7 வேலை நாட்கள் | |
| ஏற்றுமதி வரவுகள் ACU இயங்கமைப்புக்கு அப்பாற்பட்டு செலுத்தவேண்டியவை @ | 7 வேலை நாட்கள் | |
| திரும்பப் பெறுதல் / முன்பணத்தைத் தக்கவைத்தல்@ | 7 வேலை நாட்கள் | |
| I/EDPMS பிரச்சினைகளுக்கான தீர்வுகள்@ | 7 வேலை நாட்கள் | |
| 5 | இறக்குமதி | |
| நேரடி இறக்குமதிகள்@ | 7 வேலை நாட்கள் | |
| மூன்றாவது நாட்டுக்கு / வணிக வர்த்தகம் / கிடங்குகள் @ | 7 வேலை நாட்கள் | |
| இறக்குமதி வரவுகள் /ACU இயங்கமைப்புக்கு அப்பாற்பட்டு செலுத்தவேண்டியவை @ | 7 வேலை நாட்கள் | |
| 6 | மற்றவை | |
| FEMA மீறல்களை ஒன்றுசேர்த்தல் | 180 நாட்கள் | |
| @ மண்டல அலுவலகங்களில் (RO) நேர்வுகளைத் தீர்ப்பதற்கான காலக்கெடுக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. AD வங்கி / RO-இன் அதிகாரங்களுக்குள் வராத நேர்வுகள்/ மத்திய அலுவலகத்திற்கு (CO) அனுப்பிவைக்கப்படும் நேர்வுகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையிலும், சேவையை வழங்குவதற்கான கால அளவு முழுமையான விவரங்களுடன் ஆவணங்கள் மத்திய அலுவலகத்தில் பெறப்பட்ட நாளிலிருந்து 20 வேலை நாட்களாகும். கொள்கை முடிவுகள் தொடர்பான சிக்கல்கள் சம்பந்தபட்ட நேர்வுகள் இந்தக் காலக்கெடுவிற்குள் உள்ளடங்காது. | ||
பொறுப்புத் துறப்பு
-
நிர்ணயிக்கப்பட்ட காலவரைமுறைகள், ஒப்புதலுக்கு தேவைப்படும் ஆவணங்களின் முழுமையான தொகுப்பைப் பெறுவதற்கு உட்பட்டவை.
-
அரசு மற்றும்/அல்லது பிற முகமைகளிடமிருந்து FEMA 1999 அல்லது விதிமுறைகள்/ஒழுங்குமுறைகளின்கீழ் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக ஒப்புதல்/ஆட்சேபனை/உள்ளீடுகள்/கருத்துகள் தேவைப்படும் நேர்வுகள் / அங்கீகரிக்கப்பட்ட அதிகாரக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்ட நேர்வுகள் ஆகியவற்றிற்கு இங்கு குறிப்பிடப்பட்ட காலக்கெடு பொருந்தாது.
| வ.எண் | பணியின் வகை | தேவைப்படும் காலம் |
|---|---|---|
| 1 | பணத்துடன் பெறப்பட்ட சலான்களை வழங்குதல் | 20 நிமிடங்கள் (ரொக்கப் பணத்தின் மதிப்பையும் எண்ணிக்கை அளவையும் பொறுத்தது) |
| 2 | இந்திய ரிசர்வ் வங்கியில் கணக்குகள் வைத்திருக்கும் அரசின் துறைகளால் வழங்கப்பட்ட காசோலைகளுடன் பெறப்பட்ட சலான்களை வழங்குதல் | 30 நிமிடங்கள் |
| 3 | மற்ற வங்கிகளின் மீது வரையப்பட்ட உள்ளூர் காசோலைகளுடன் பெறப்பட்ட சலான்களை வழங்குதல் | 3 முழுமையான வேலை நாட்களுக்குப் பிறகு |
| 4 | வெளியூர் காசோலைகளுடன் பெறப்பட்ட சலான்களை வழங்குதல் | 7 நாட்கள் (நான்கு பெருநகரங்களுக்கு) 15 நாட்கள் (மற்ற இடங்கள்) |
| 5 | அரசு துறைகளுக்கு பட்டியல்களை அளித்தல் | அடுத்த வேலை நாள் |
| 6 | மாதாந்திர அறிக்கைகளை அரசுத் துறைகளுக்கு அளித்தல் | அடுத்த மாதத்தின் இரண்டாவது வேலை நாள் |
| 7 | அரசு காசோலைகள் மூலம் பணம் திரும்ப எடுத்தல் | 20 நிமிடங்கள் (ரொக்கப் பணத்தின் மதிப்பையும் எண்ணிக்கை அளவையும் பொறுத்தது) |
| 8 | வரவு/செலவு பட்டியல்களை முகமை வங்கிகளிடமிருந்து பெறுதல் மற்றும் கேட்பு/தீர்வினை ஈடு செய்தல் | அன்றாடம் |
| வ.எண் | பணியின் வகை | தேவைப்படும் காலம் |
|---|---|---|
| 1 | பத்திரங்களின் நகல்களை வழங்குதல் (அ) அரசு உறுதிப்பத்திரம் |
அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 3 மாதங்கள் |
| (ஆ) நகல் ரசீது | உரிமைகோரலை ஏற்றுக்கொண்ட 2 நாட்களுக்குள் | |
| 2 | வட்டி ஆணைப்படிவு- பணம் வழங்கல் | |
| (அ) பங்குச் சான்றிதழ் | உரிய தேதியில் | |
| (ஆ) துணை பொதுப் பேரேடு (SGL) | உரிய தேதியில் | |
| (இ) சேமிப்புப் பத்திரம் | உரிய தேதியில் | |
| 3 | (அ) அடமானம் மற்றும் காப்புரிமைப் பதிவு/மாற்றம் | 4 நாட்கள் |
| (ஆ) வட்டி பெறும் இடம் மாற்றுதல் | மாற்றும் பொதுக் கடன் அலுவலகத்திலிருந்து சிறப்பு ரத்து தகவல் அறிக்கை வந்தபின் 2 நாட்கள் | |
| (இ) மாற்றுப் பங்குச் சான்றிதழ் வழங்குதல் | 4 நாட்கள் | |
| 4 | துணை பொதுப் பேரேட்டுக்கு மாற்றுதல் | 3 நாட்கள் |
| 5 | துணை பொதுப் பேரேட்டிலிருந்து பங்குச் சான்றிதழ்களாக மாற்றிக் கொள்ளுதல் | 2 நாட்கள் |
| 6 | முதலீட்டை திருப்பி தருவதற்காக பத்திரங்களைப் பெறுதல் | 5 நாட்கள் |
| 7 | துணை பொதுப் பேரேடுகளுக்குள் மாற்றம் | 1 நாள் |
| 8 | பகராள் செயலுரிமை ஆவணம்/பகர அதிகார ஆவணத்தை பதிவு செய்தல் மற்றும் அங்கீகரித்தல் | 1 நாள் |
| 9 | பிற சேவைகள் | |
| (அ) ஆய்வு | 1 நாள் | |
| (ஆ) விற்றல் அதிகார இதழ்ப் பதிவு | 1 நாள் | |
| (இ) பங்குச் சான்றிதழ் புதுப்பித்தல் | 6 நாட்கள் | |
| (ஈ) பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து திரும்பப் பெறுதல் | 1 நாள் | |
| 10 | வட்டி ஆணைப்படிவு மறுமதிப்பீடு செய்தல் | 1 நாள் |
| 11 | நியமனப் பதிவு | 1 நாள் |
| 12 | அடமானம் மாற்றும் காப்புரிமையை பதிவு மற்றும் ரத்து செய்தல் | |
| (அ) பங்குச் சான்றிதழ் | 3 நாட்கள் | |
| (ஆ) துணை பொதுப் பேரேடு | 1 நாள் | |
| வ.எண் | பணியின் வகை* | தேவைப்படும் காலம் |
|---|---|---|
| 1 | நாணயங்களை வழங்குதல் | 15 நிமிடங்களுக்குள் (வழங்கப்படும் எண்ணிக்கை அளவைப் பொறுத்து) |
| 2 | நாணயங்களை பெற்றுக்கொள்ளுதல் | 15 நிமிடங்களுக்குள் (வழங்கப்படும் எண்ணிக்கை அளவைப் பொறுத்து) |
| 3 | அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருதல் | 15 நிமிடங்களுக்குள் (வழங்கப்படும் எண்ணிக்கை அளவைப் பொறுத்து) |
| 4 | குறைபாடுள்ள/ கிழிந்து போன ரூபாய் நோட்டுகளை மாற்றுதல் | 30 நிமிடங்களுக்குள் (வழங்கப்படும் எண்ணிக்கை அளவைப் பொறுத்து) |
| * சேவை வழங்கல் அலுவலகங்களுக்கிடையில் மாறுபடலாம் | ||