New FAQ Page 2 - ஆர்பிஐ - Reserve Bank of India
rbi.page.title.1
rbi.page.title.2
ப்ரீபெயிடு பேமெண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் (பிபிஐ–க்கள்)
பதில். முடியாது. பிபிஐ–களில் லோடு செய்யப்படும் தொகையை பிரிக்க அனுமதி இல்லை. எனவே ₹ 50000 க்கும் மேற்பட்ட தொகை பரிவர்த்தனை செய்யப்பட்டால் அத்தொகை முழுவதும் வங்கிக் கணக்கில் கிரெடிட் செய்யப்படும்.
பதில். பிபிஐ பயன்படுத்தி செய்யப்படும் ஒவ்வொரு தொடர் பரிவர்த்தனையும் வாடிக்கையாளரின் வெளிப்படையான ஒப்புதல் அங்கீகாரம் தேவை. இதேபோல், கார்டுகளாக (கார்டு அல்லது மெய்நிகர் கார்டு) வழங்கப்பட்ட பிபிஐ–களுக்கு, பிபிஐ–எம்டிஎஸ் கீழ் வழங்கப்பட்ட பிபிஐ–களைதத் தவிர, டெபிட் கார்டுகளுக்கு தேவைப்படுவது போலவே கூடுதல் அங்கீகார காரணி (ஏஎஃப்ஏ) தேவைப்படும்.
பதில். அனைத்து பிபிஐக்களுக்கும் கடைசியாக லோடு/ரீலோடு செய்த தேதியிலிருந்து 12 மாத வேலிடிட்டி காலம் உண்டு. இருப்பினும் பிபிஐயை வழங்குவோர் நீண்ட வேலிட்டிட்டி காலத்துடன் பிபிஐய–யை வழங்கலாம். பிபிஐ–யை வழங்கும் நிறுவனம் பிபிஐ வழங்கும் நேரத்தில் அதன் காலாவதி தேதியை வாடிக்கையாளருக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும்.
பதில். ஒரு பிபிஐ–யில் தொடர்ந்து 12 மாதங்களுக்கு நிதிப் பரிவர்த்தனைகள் எதுவும் செய்யப்படவில்லை என்றால், பிபிஐ வைத்திருப்பவருக்கு அறிவிப்பு செய்த பிறகு அது செயலிழந்ததாக கருதப்படும். அதை சரிபார்த்து உரித்தாகும் கவனம் செலுத்தப்பட்ட பிறகே செயல்படுத்தப்படும்.
பதில். எதாவது ஒரு காரணத்திற்காக திட்டம் முடிக்கப்பட்டாலோ அல்லது ஆர்பிஐயின் வழிமுறைகளின்படி அது நிறுத்தப்பட்டாலோ அத்தகையை பிபிஐ–யை வைத்திருப்பவர் அதிலுள்ள இருப்புத் தொகையை மீட்டு எடுத்துக் கொள்ளலாம்.
பதில். தவறிய/திருப்பி அனுப்பப்பட்ட/ நிராகரிக்கப்பட்ட/ரத்து செய்யப்பட்ட பரிவர்த்தனைகளுக்கான பணத்தை அந்தந்த பிபிஐ–க்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். அதாவது பிபிஐ–யில் ஆரம்பத்தில் டெபிட் செய்யப்பட்ட தொகைக்கு நிகரான தொகையை வழங்க வேண்டும். அவ்வாறு திரும்ப வழங்கப்படும் தொகை அவ்வகை பிபிஐ–க்கு உரிய வரம்பிற்கும் அதிகமாக இருந்தாலும்கூட.
பதில். பிபிஐ–யை வழங்குவோர் பிபிஐ–யை வைத்திருப்போருக்கு குறைந்தபட்சம் கடந்த 6 மாத கணக்கு அறிக்கையை உருவாக்கும்/பெறும் தேர்வை வழங்க வேண்டும். அந்த கணக்கு அறிக்கையில் குறைந்தபட்சமாக பரிவர்த்தனையின் தேதி, டெபிட்/கிரெடிட் தொகை, நிகர இருப்புத் தொகை மற்றும் பரிவர்த்தனைகளின் விவரங்கள் இருக்க வேண்டும். பிபிஐ–யை வழங்குவோர் கூடுதலாக குறைந்தபட்சம் கடந்த 10 பரிவர்த்தனைகளின் வரலாற்றை வழங்க வேண்டும்.
பதில். பிபிஐ வழங்குபவர் பின்வரும் இரண்டு வகைகளில் ஏதேனும் ஒன்றை மட்டுமே வாடிக்கையாளருக்கு வழங்க முடியும்:
a) குறைந்தபட்ச விவரமுள்ள பாதி மூடிய பிபிஐ;
b) KYC நடைமுறை கொண்ட பாதிமூடிய / திறந்த கணினி முறை பிபிஐ;
பதில். அங்கீகாரம் பெற்ற வங்கி அல்லது பிபிஐ–யை வழங்கும் வங்கி சாரா நிறுவனம் பிபிஐ–உள்இயங்குதளத்தின் வசதியை வழங்கலாம்.
பதில். கேஒய்சி நடைமுறைகளுக்குட்பட்டப் பிபிஐக்களுக்கு மட்டுமே உள்இயங்கக்கூடிய தன்மை அனுமதிக்கப்படுகிறது.
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: null
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: null
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?