குறைந்தபட்ச இருப்பு இல்லாமல் BSBD கணக்கு - ஆர்பிஐ - Reserve Bank of India
rbi.page.title.1
rbi.page.title.2
கண்ணோட்டம்
கண்ணோட்டம்
பேசிக் சேவிங்க்ஸ் பேங்க் டெபாசிட் (BSBD) கணக்கைத் தொடங்குங்கள். குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆதார் கார்டு மற்றும் பேன் கார்டு அல்லது படிவம் எண் 60 உடன் சுலபமாகத் தொடங்கி விடலாம்.
- பேசிக் சேவிங்க்ஸ் பேங்க் டெபாசிட் அக்கவுண்டை (பிஎஸ்பிடிஏ) எந்த ஒரு தனிநபரும் தொடங்கிவிடலாம். இதற்கு குறிப்பிட்ட வயது வரம்போ வருமான வரம்போ எதுவும் இல்லை.
- பிஎஸ்பிடி கணக்கை தொடங்க ஆரம்ப டெபாசிட் எதுவும் தேவையில்லை. அந்தக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கும் அவசியமும் இல்லை.
- வாடிக்கையாளரின் கோரிக்கையின் பேரில் வழக்கமான சேமிப்புக் கணக்கை பிஎஸ்பிடி கணக்காக மாற்றலாம்.
- பிஎஸ்பிடி கணக்குதாரர்களுக்கு ஏடிஎம்-கம்-டெபிட் கார்டு போன்றவை இலவசமாக வழங்கப்படுகின்றன.
- பிஎஸ்பிடி கணக்குகளில் எத்தனை முறை வேண்டுமென்றாலும் வரம்பின்றி பணம் செலுத்தலாம்.
- பிஎஸ்பிடி கணக்குதாரர்கள் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக நான்கு முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். இதில் ஏடிஎம்-ல் பணம் எடுப்பது, ஆர்டிஜிஎஸ்/நெஃப்ட்/கிளியரிங்/இன்டர்நெட் டெபிட்/நிலையான ஆணை/இஎம்ஐ போன்றவை அடங்கும்.
- பிஎஸ்பிடி கணக்குதாரர்கள் அதே வங்கியில் வழக்கமான சேமிப்புக் கணக்கு வைத்திருக்க முடியாது.
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்
விரைவு இணைப்புகள்
நீங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பும் தலைப்பு மீது கிளிக் செய்யவும் மற்றும் அது பற்றிய விரிவான தகவல் உங்களிடம் இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களுக்கு rbikehtahai@rbi.org.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும்
20099
உங்கள் நிதிகளை பாதுகாக்கவும்
டிஜிட்டல் பேங்கிங்கிற்கு மாறுங்கள்
உங்கள் நாணயத்தை தெரிந்து கொள்ளுங்கள்
வங்கி ஸ்மார்ட்டர்
ஆர்பிஐ-ஐ தொடர்பு கொள்ளுங்கள்
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: null
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?